விருத்தாசலத்தில் திமுக அவசர செயற்குழு கூட்டம்

விருத்தாசலத்தில் திமுக அவசர செயற்குழு கூட்டம்

ஆலோசனை கூட்டம் 

விருத்தாசலத்தில் திமுக அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு விருத்தாசலம் நகர திமுக சார்பில் நகர செயலாளர் க. தண்டபாணி தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விருத்தாசலம் நகர்மன்ற தலைவர் சங்கவி முருகதாஸ் மற்றும் நகர திமுக கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதில் 22 ஆண்டுகளாக உள்ள திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு முக்கிய பங்கு வகிக்கிற முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றிகள், இந்தியா கூட்டணியின் கடலூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் வெற்றிபெற வாழ்த்துக்கள் முதல்வர், மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கு பெறும் கூட்டத்தில் பெரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும். காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் நடைபெறும் கூட்டத்திற்கு விருத்தாசலம் நகர கழகம் சார்பில் கலந்து கொள்ள வேண்டும். போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.

Tags

Next Story