உணவகத்தில் உணவு தயாரித்து வழங்கி திமுக நிர்வாகி பிரசாரம்

உணவகத்தில் உணவு தயாரித்து வழங்கி திமுக நிர்வாகி பிரசாரம்

உணவு தயாரித்து வழங்கி பிரசாரம் 

மதுராந்தகம் திமுக நகர செயலாளர் குமார் துரித உணவகத்தில் உணவு தயாரித்து வழங்கியும், வீடு வீடாக சென்று துண்டு பிரச்சார நோட்டீஸ் வழங்கியும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் நகரில் உள்ள 24 -வார்டுகளில் மதுராந்தகம் நகரம் சார்பில் நகர மன்ற உறுப்பினர் மலர்வழி குமார், நகர செயலாளர் குமார் ஆகியோர் வீடு வீடாக சென்று துண்டு பிரச்சார நோட்டிஸ் வழங்கி காஞ்சி பாராளுமன்ற திமுக வேட்பாளர் செல்வத்திற்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தார். அவருடன் நகரம் மன்ற உறுப்பினர்கள்,நகர பொறுப்பாளர்கள் 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்பொழுது துரித உணவகத்தில் நகர செயலாளர் குமார் உணவகத்தில் உணவு தயாரித்து அங்கு உள்ளவர்களுக்கு பரிமாறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Tags

Next Story