திமுக ., செயற்குழு கூட்டம்

தர்மபுரியில் திமுக., செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி முன்னிலையில் நடந்தது.

இன்று மாலை 4 மணி அளவில் திமுக கட்சி அலுவலகத்தில் செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி முன்னிலையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு திமுகழக மாவட்ட அவை தலைவர் சி.செல்வராஜ் அவர்கள் தலைமையிலும் தர்மபுரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் தடங்கம் பெ சுப்ரமணி அவர்கள் இதில் மாநில உரிமைகளை காத்திட மத்தியில் ஆளும் ஒன்றிய பாசிச பாஜக அரசை கண்டித்து 8 தேதி காலை 10 மணி அளவில் தர்மபுரி BSNL அலுவலகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் பென்னாகரம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் குப்பம் கோபி மாநில நிர்வாகி செந்தில் குமார் மாவட்ட நிர்வாகிகள் தங்கமணி, உமாசங்கர், ரேணுகாதேவி, தலைமை செயற்குழு உறுப்பினர் நடராஜ் பொதுக்குழு உறுப்பினர் சோலைமணி நகர கழக செயலாளர் நாட்டான் மாது ஒன்றிய கழக செயலாளர்கள் KSR சேட்டு, வைகுந்தம், மல்லமுத்து, ஏரியூர் செல்வராஜ், மடம் முருகேசன், சபரிநாதன், வீரமணி, சண்முகம்மற்றும் அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story