ஜெகத்ரட்சகனுக்கு வாழ்த்து தெரிவித்த திமுக மாநில நிர்வாகி!

X
ஜெகத்ரட்சகன்
இராணிப்பேட்டை திமுக அலுவலகத்தில் திமுக வேட்பாளரை சுற்றுச்சூழல் அணி மாநில துணைச் செயலாளர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் வேட்பாளராக ஜெகத்ரட்சகன் அறிவிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து பல்வேறு இடங்களில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடந்து வருகிறது. இந்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்ட திமுக அலுவலகத்தில் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் ஜெகத்ரட்சகனை, திமுக சுற்றுச்சூழல் அணியின் மாநில துணைச் செயலாளர் வினோத் காந்தி இன்று நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் தேர்தலில் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் இருவரும் ஆலோசனை செய்தனர்.
Next Story
