வாசுதேவநல்லூரில் திமுக நிர்வாகி மறைவு: எம்.பி. கனிமொழி ஆறுதல்
வாசுதேவநல்லூரில் திமுக நிர்வாகி மறைந்த நிலையில், எம்.பி. கனிமொழி ஆறுதல் கூறினார்.
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் ஒன்றிய தலைவரும், திமுக ஒன்றிய செயலாளருமான பொன். முத்தையா பாண்டியனின் சகோதரர் பொன் கருத்த பாண்டியன், நேற்று முன்தினம் உடல்நலக்குறைவால் காலமானார்.
இதையறிந்த திமுக தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, உள்ளாறில் உள்ள அவரது வீட்டிற்கு நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
இந்த நிகழ்ச்சிகள் மதிமுக துணை பொதுச்செயலாளர் ராஜேந்திரன், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் ராணிஸ்ரீ குமார், தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா உள்ளிட்டோரும் ஆறுதல் தெரிவித்தனர்.
Next Story