திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

ஆலோசனை கூட்டம் 

திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் தலைமையில் பாண்டியன் நகரில் திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
திருப்பூர் வடக்கு மாநகரம் பாண்டியன்நகர் பகுதி நிர்வாகிகள் மற்றும் தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், நாற்பதும் நமதே நாடும் நமதே என்ற குறிக்கோளுடன் பணியாற்றுவது குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் மாநகர செயலாளர், மேயர் தினேஷ்குமார் மற்றும் திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் திராவிட மணி, கவுன்சிலர்கள் மாலதி கோவிந்தராஜ், லோகநாயகி கருப்பசாமி, வேலம்மாள் காந்தி, பகுதி செயலாளர் ஜோதி, நிர்வாகிகள் தயானந்தம், துணைச்செயலாளர் திவ்யா சரவணன், புஷ்பரத்தினம், பகுதி இளைஞரணி அமைப்பாளர் ராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story