எடப்பாடியில் திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் !

எடப்பாடியில் திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் !

திமுக 

எடப்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் திமுக நிர்வாகிகள் கூட்டம் வெள்ளாண்டி வலசு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
சேலம் மேற்கு மாவட்டத்திற்குட்பட்ட எடப்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சேலம் மேற்கு மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குயின் ஒன்றிய பகுதிகளிலுள்ள ஊராட்சியில் நடைப்பெற்ற திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளருமான டி.எம்.செல்வகணபதி பங்கேற்று வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக அரசின் சாதனைகளை பொதுமக்களிடத்தில் எடுத்துக் கூறி எப்படி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை சேகரிப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை வழங்கி சிறப்பித்தார். அப்போது எடப்பாடி ஒன்றிய திமுக செயலாளர் நல்லதம்பி, மாவட்ட துணை செயலாளர் சம்பத்குமார், ஊராட்சி மன்ற தலைவர் பழனியம்மாள் மணி உட்பட திமுக நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர்.

Tags

Next Story