மதுரவாயல் எம்எல்ஏ தலைமையில் திமுக நிர்வாகிகள் கூட்டம்

சென்னை தெற்கு மாவட்டம், மதுரவாயல் எம்எல்ஏ தலைமையில் திமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
சென்னை தெற்கு மாவட்டம், மதுரவாயல் தொகுதி தி.மு.க நிர்வாகிகள், பாகமுகவர்கள், பாக ஒருங்கிணைப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம் போரூர் கிருஷ்ணவேணி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மதுரவாயல் வடக்கு பகுதி செயலாளர் நொளம்பூர் வே.ராஜன் , வில்லிவாக்கம் தெற்கு ஒன்றிய செயலாளர் அயப்பாக்கம் அ.ம. துரைவீரமணி ஆகியோர் முன்னிலையில் மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் கணபதி சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில் மதுரவாயல் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் மாநில தொண்டரணி செயலாளர் மாஸ்டர் பெ. சேகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்நிகழ்வில் திமுக கட்சியின் மதுரவாயல் சட்டமன்றத் தொகுதி தலைமை பொதுக்குழு உறுப்பினர், மாவட்ட அமைப்பாளர்கள், பகுதி கழக நிர்வாகிகள், மாவட்ட பிரதிநிதிகள்,வட்ட கழக செயலாளர்கள்,மாமன்ற உறுப்பினர்கள் அணிகளின் மாவட்ட , பகுதி, வட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story