வேதாரண்யத்தில் திமுக நிதிநிலை விளக்கபொதுக்கூட்டம்

வேதாரண்யத்தில் திமுக நிதிநிலை விளக்கபொதுக்கூட்டம்

பொதுகூட்டம்

நாகை மாவட்டம், வேதாரண்யம் ராஜாஜி பூங்காவில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழா மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

நாகை மாவட்டம், வேதாரண்யம் ராஜாஜி பூங்கா வில்திமுக தலைவர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழா மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்கப் பொதுக்கூட் டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நாகை மாவட்ட திமுக செயலாளர், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத் தலைவர் கவுதமன் தலைமை வகித்தார். விழாவில் திமுக மருத்துவர் அணிச் செயலர் சட்டமன்ற உறுப்பினர் எழில் நாகநாதன் கலந்து கொண்டு சிறப் புரையாற்றினார்.

அப்போது தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் புதுமைப்பெண் திட்டம், தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவு திட்டம் குறித்து விளக்கி பேசினார். இந்த விழாவில் திமுக மேற்கு ஒன்றிய செயலர் உதயம் முருகையன், கிழக்கு ஒன்றிய செயலாளர் சதாசிவம், தலைஞாயிறு ஒன்றிய கழக செயலாளர் மகா குமார் வேதாரண்யம் நகர மன்ற தலைவர் புகழேந்தி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வேதாரத்தினம், உள் ளாட்சி பிரதிநிதிகள், திமுக சார்பு அணி பொறுப்பாளர்கள் மற்றும் ஏராளமான கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story