தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் பா.ஜ.க.வில் ஐக்கியம்
குமாரபாளையம். தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் பா.ஜ.க.வில் ஐக்கியமானார்
குமாரபாளையம். தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் பா.ஜ.க.வில் ஐக்கியமானார்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சேர்ந்த தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் பா.ஜ.க.வில் ஐக்கியமானார்.நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதையடுத்து அரசியல் கட்சியினர் தங்கள் தேர்தல் பணிகளை துவங்கியுள்ளனர். வாக்காளர்கள் அதே முகவரியில் உள்ளனரா? வேறு ஊருக்கு சென்று விட்டனரா? அவ்வாறு சென்றிருந்தால் அவரை நேரில் சந்தித்து தங்கள் கட்சிக்கு வாக்களியுங்கள் என பிரச்சாரம் செய்து வருகின்றனர். மேலும் ஒவ்வொரு கட்சியினரும் புதிய வாக்காளர்களை சேர்த்து வருவதுடன், மாற்றுக்கட்சி நபர்களை தங்கள் கட்சியில் சேர்ப்பதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் ஒரு கட்டமாக மாவட்ட பொது செயலர் வழக்கறிஞர் சரவணராஜன் ஏற்பாட்டில், குமாரபாளையம் தி.மு.க. முன்னாள் கவுன்சிலர், முன்னாள் மாவட்ட பிரதிநிதியுமான வடிவேல், பா.ஜ.க. மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். இவருக்கு கட்சி நிர்வாகிகள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
Next Story