திமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் தீவிர வாக்கு சேகரிப்பு !

திமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் தீவிர வாக்கு சேகரிப்பு !

 திமுக

ஈரோடு பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பிரகாஷ் அவர்களுக்கு ஆதரவாக, பள்ளிபாளையம் ஒன்றிய முன்னாள் திமுக செயலாளர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக கே.இ.பிரகாஷ் அவர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். தேர்தலுக்கு குறுகிய நாட்களே உள்ளதால், திமுகவினர் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பள்ளிபாளையம் ஒன்றிய முன்னாள் திமுக செயலாளர் வெப்படை ஜி செல்வராஜ் அவர்கள், பள்ளிபாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கொக்கராயன்பேட்டை பஞ்சாயத்து மற்றும் பாப்பம்பாளையம் பஞ்சாயத்து ஆகிய பகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அவருடன் திமுக கூட்டணி கட்சியின் தொண்டர்கள், ஏராளமானோர் வீடு வீடாக சென்று, ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் பிரகாஷ் அவர்களுக்கு, உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் அளித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டனர். ஈரோடு பாராளுமன்ற தொகுதியை மீண்டும் தக்க வைக்க வேண்டும் என திமுகவினர் தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story