திமுக செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம்

X
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் மக்களவை தேர்தல் பணிகள் குறித்து திமுகவின் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் மக்களவை தேர்தல் பணிகள் குறித்து திமுகவின் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் எதுமலை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மண்ணச்சநல்லூர் எம்எல்ஏ கதிரவன் ஆலோசனைப்படி மண்ணச்சநல்லூர் எதுமலை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வருகின்ற மக்களவைத் தேர்தல் பணிகள் குறித்து நகர அவைத் தலைவர் வழக்கறிஞர் ராஜேந்திரன் தலைமையில் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் வருகின்ற மக்களவை தேர்தலில் எவ்வாறு பணிகள் ஆற்றுவது குறித்தும், தமிழக அரசின் சாதனைகளை எடுத்துரைப்பது குறித்தும் ஆலோசனைகள் நடைபெற்றது. இந்நிகழ்வில் மண்ணச்சநல்லூர் நகர செயலாளர் மனோகரன், பேரூராட்சித் தலைவர் சிவசண்முகக்குமார், மேற்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் செந்தில், மாவட்ட துணை செயலாளர் பானுமதி கண்ணன் மற்றும் மாவட்ட, ஒன்றிய ,நகர திமுக நிர்வாகிகள், இளைஞர் அணியினர், தகவல் தொழில்நுட்ப அணியினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
