திமுக செயல்வீரர் கூட்டம் - அமைச்சர், எம்.பி பங்கேற்பு
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தனியார் திருமணத்தில் திமுக சார்பில் செயல்வீரர் கூட்டமானது ராசிபுரம் நகர கழக செயலாளர் என்.ஆர்.சங்கர் தலைமையில் நடைபெற்றது. இதில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என். ராஜேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டு திமுகவின் சாதனைகளையும், அதிமுகவின் குற்றங்களையும் எடுத்துரைத்து வாக்கு சேகரிக்க வேண்டும் என நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார்.
அதே போல் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் நமது திமுக கூட்டணியின் வேட்பாளர் மாதேஸ்வரனை வெற்றி பெற செய்ய அனைவரும் வாக்கு சேகரிக்க வேண்டும் என கூறினார்.
பின்னர் மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ் குமார் பேசுகையில் இந்தியாவை,வட மாநில முதலமைச்சர் வியந்து பார்க்கின்ற அளவிற்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் காலை உணவு திட்டத்தை தொடங்கியுள்ளார். ஒரு காலத்தில் ராசிபுரம் என்றாலே பெண் தர மாட்டார்கள் ஏனென்றால் குடிநீர் பற்றாக்குறை இருந்தது, திமுக ஆட்சியில் கூட்டுக் குடிநீர் திட்டமானது தற்போது வழங்கப்பட்டுள்ளது. வருகின்ற பொங்கலுக்குள் அனைத்து மக்களின் வீடுகளுக்கு குடிநீர் வழங்கப்படும். பத்தாண்டு ஆட்சி காலத்தில் அதிமுக சாதனைகள் எதுவும் கிடையாது .
இதே ராசிபுரத்தில் அதிமுக ஆட்சியில் சபாநாயகராக தனபால் இருந்தார். அதேபோல சத்துணவு மற்றும் சமூக நலத்துறை அமைச்சராக சரோஜா இருந்தார். மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு இவர்கள் ஏதாவது தீர்வு கண்டார்களா அதேபோல தற்போது ஏழை எளிய மக்களுக்கு பட்டாவும் கிடைக்காமல் அவதிப்பட்டனர். இன்று நாமக்கல் மாவட்டத்தில் 14,000 பட்டா எனது கையால் வழங்கியுள்ளேன் என்பதும் நான் பெருமைப்படுகிறேன். மேலும் தமிழக முதல்வர் மு .க. ஸ்டாலின் இரண்டரை ஆண்டு கால ஆட்சியில் மக்கள் நலத்திட்டங்கள் ஏராளமாக செய்து இன்று அனைவரும் பெருமைப்படும் அளவுக்கு சிறப்பான ஒரு ஆட்சியை தந்து கொண்டு உள்ளார். தமிழினத்தையும், தமிழ் சமுதாயத்தையும் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது யார் என்றால் தமிழக முதல்வர் ஸ்டாலின் தான் என பெருமையுடன் கூறினார்.இந்தியாவிற்கே கஞ்சா சப்ளை செய்யும் மாநிலம் குஜராத் அது மோடியின் ஊராகும் எனவும் ராஜேஷ்குமார் குற்றம் சாட்டி பேசினார்.
பின்னர் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் பேசுகையில் முன்னாள் அதிமுக அமைச்சர் சரோஜா ராசிபுரத்தில் அவர் வீட்டிற்கு செல்லும் வழிக்கு மட்டுமே சாலை அமைத்துக் கொண்டார். ஆனால் நான் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு ராசிபுரத்தில் 55 கிலோமீட்டர் தொலைவிற்கு சாலை அமைக்கப்பட்டுள்ளது.இது தான் அதிமுகவிற்கும் திமுகவிற்கும் உள்ள வித்தியாசம். வடிவேல் சொல்வது போல் துபாயில் உள்ள சாலையைப் போல் ராசிபுரத்தில் சாலை உள்ளது. போதமலையில் உள்ள மலைவாழ் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக சாலை அமைக்கப்படுகிறது என பேசினார். நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் முனைவர் திருமதி ஆர் கவிதா சங்கர், நாமக்கல் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கல்யாண் ஜுவல்லரி ரங்கசாமி, பொருளாளர் ஏ .கே. பாலச்சந்தர் , மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள், மகளிர் அணியினர், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.