திமுகவினர் டோக்கன் வழங்குவது தேர்தல் விதிமீறல் - பாபு முருகவேல்.
பாபு முருகவேல்
நாடாளுமன்ற பொது தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் தொடர்ந்து தேர்தல் விதி மீரல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது, திராவிட முன்னேற்ற கழகம் வாக்குக்கு பணம் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தது. ஆனால் இந்த தேர்தலில் வாக்குக்கு பணம் கொடுப்பதற்கு பதிலாக திமுக தலைவரின் படம் பதித்த டோக்கன்களை தமிழகமெங்கும் வழங்கி இருக்கிறது இது அப்பட்டமான தேர்தல் விதி மீறலாகும்.
வாக்காளர்களுக்கு கையூட்டுக் கொடுப்பதற்கு சமமாகவும் இந்திய தண்டனைச் சட்டத்தில் தண்டிக்கப்படக்கூடிய குற்றமாகவும் கருதப்படுகிறது. இது தமிழகமெங்கும் அனைத்து தொகுதிகளிலும் இதுபோன்ற நிலைமையை திராவிட முன்னேற்ற கழகம் மேற்கொண்டு இருக்கிறது வழங்கப்பட்ட டோக்கனை கொண்டு வாக்களித்த பிறகு வாக்காளர்கள் அந்த டோக்கனை கொண்டு சென்று திமுக நிர்வாகிகளிடத்திலே கொடுக்கிற போது அதற்கு பணம் தருவதாகவும் உறுதியளித்திருக்கிறார்கள்.
கொடுக்கப்பட்ட டோக்கன் மாதிரியை இணைத்து தலைமை தேர்தல் அதிகாரியிடத்திலே புகார் மனுவாக கொடுத்திருக்கிறோம். இது வாக்குக்கு லஞ்சம் கொடுத்து வாக்குகளை பெறுவதற்கு உண்டான முயற்சியாக கருதப்படுகிறது இது உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் இது போன்ற டோக்கன் வழங்கும் நிர்வாகிகளை கைது செய்து அவர்களின் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் படியும் தேர்தல் நடத்தை விதிமுறைகளின் படியும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக செய்தி தொடர்பாளரும், கழக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளருமான ஆர். எம். பாபு முருகவேல் புகார் மனு கொடுத்தார். அந்த புகார் மனுவை முழுவதுமாக படித்துப் பார்த்த தலைமை தேர்தல் அதிகாரி உரிய நடவடிக்கை எடுப்பதாக உத்திரவாதம் அளித்திருக்கிறார்.