திமுக அரசு கண்டித்து அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம்
தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதையை ஒழிக்க தவறிய திமுக அரசை கண்டித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் தூத்துக்குடி பேருந்து நிலையம் முன்பு மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதையை ஒழிக்க தவறிய திமுக அரசை கண்டித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் தூத்துக்குடி பேருந்து நிலையம் முன்பு மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும் மாவட்டச் செயலாளருமான எஸ்பி சண்முகநாதன் தலைமையில் ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் பேசும்போது மத்திய அரசுக்கு முதுகெலும்பே கிடையாது தமிழகத்திற்கு மோடி பறந்து பறந்து வந்தாலும் ஆட்சியைப் பிடித்து விட முடியுமா அரிசி விலையை கூட்டி விட்டீர்கள் என்ற அவர் தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதையை தடுக்க தவறிய திமுக அரசுக்கு மக்கள் வரும் பாராளுமன்ற தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும் என கேட்டுக் கொண்டார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கழக அமைப்புச் செயலாளர் என் சின்னத்துரை, அகில உலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் ஹென்றி தாமஸ், மாநில வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் பிரபு, முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் சுதாகர், மாவட்ட அமைத்த தலைவர் திருப்பாற்கடல், மாவட்ட மாணவரணி செயலாளர் பில்லா விக்னேஷ் மாவட்ட இளம்பெண் பாசறை பொருளாளர் புல்லட் மணிபூரண ராஜா மாவட்ட அண்ணா ஆட்டோ தொழிற்சங்க செயலாளர் நிலா சந்திரன் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் சரவணன் மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் திருச்சிற்றம்பலம், பகுதி செயலாளர்கள் ஜெய்கணேஷ் சேவியர் முருகன் முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் செண்பகச் செல்வன் செல்லப்பா தகவல் தொழில்நுட்ப பிரிவு சகாயராஜ், சாம்ராஜ், மைதீன், வட்ட செயலாளர் நவசாத் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story