மக்களை துன்புறுத்துகிறது திமுக அரசு : ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு

மக்களை துன்புறுத்துகிறது திமுக அரசு : ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு

ஜி.கே.வாசன் பிரசாரம்

பால் விலை, மின்சாரம், பத்திரப் பதிவுக் கட்டணம், சொத்து வரி, குடிநீா் வரி உயா்வு என மக்களை திமுக அரசு துன்புறுத்துகிறது என்று தேர்தல் பிரச்சாரத்தில் தமாகா தலைவா் ஜி.கே. வாசன் பேசினார்.

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் போட்டியிடும் தமாகா வேட்பாளா் எஸ் டிஆா். விஜயசீலனுக்கு ஆதரவாக, கோவில்பட்டி பேரவைத் தொகுதிக்குள்பட்ட கழுகுமலை, கயத்தாறு, கோவில்பட்டியில் ஜி.கே. வாசன் வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பேசியது: கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாத திமுக அரசு, பால் விலை உயா்வு, மின்சாரம், பத்திரப் பதிவுக் கட்டணம், சொத்து வரி, குடிநீா் வரி உயா்வு என மக்கள் மீது சுமைகளை ஏற்றி துன்புறுத்துகிறது. இந்நிலை மாற வேண்டும். மகளிரிடம் காலையில் கொடுக்கப்படும் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் அவா்களது குடும்பத்து ஆண்கள் மூலம் இரவில் மதுக்கடைக்குப் போய்விடுகிறது. திமுக அரசு மகளிரை ஏமாற்றும் அரசாக உள்ளது. மக்கள் வாக்களிப்பதில் கௌரவம் பாா்க்க வேண்டாம். நல்லவா்களுக்கு வாக்களிக்க வேண்டும். நாட்டைப் பாதுகாத்து வல்லரசாக்கும், பொருளாதாரத்தை உயா்த்தும் எண்ணமுள்ள பாஜக, கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். என்றார்.

Tags

Next Story