கடையநல்லூரில் திமுக அரசின் சாதனை விளக்க பிரச்சாரம்

கடையநல்லூரில் திமுக அரசின் சாதனை விளக்க பிரச்சாரம்

திமுகவினர் பரப்புரை 

கடையநல்லூரில் நடந்த இல்லம் தோறும் ஸ்டாலின் குரல் திண்ணை பிரச்சார நிகழ்ச்சியில் தமிழக அரசின் சாதனைகளை திமுகவினர் மக்களிடம் பரப்புரை மேற்கொண்டனர்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் உள்ள 8 வது வார்டில் இல்லம் தோறும் ஸ்டாலின் குரல் திமுக அரசின் சாதனை விளக்க தெருமுனை திண்ணை பிரச்சாரம் நேற்று இரவு நகர அவைத் தலைவர் பெட்டி முருகையா, 8வது வார்டு செயலாளர் முருகையா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இந்த பிரச்சாரத்தில் நகர மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் கலந்து கொண்டு பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ராம முருகன் உள்ளிட்ட ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story