மக்களின் கஷ்டங்களை அறிந்து உதவுவதுதான் திமுக - அமைச்சர் மதிவேந்தன்

மக்களின் கஷ்டங்களை அறிந்து அதற்கு உதவுவதுதான் திமுக அரசு என எலச்சிபாளையத்தில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் அமைச்சர் மதிவேந்தன் பேசினார்.

நாமக்கல் மேற்கு மாவட்டம் எலச்சிபாளையம் கிழக்கு ஒன்றியத்தில் இந்தியா கூட்டணியின் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் வி.எஸ்.மாதேஸ்வரனுக்கு ஆதரவு தெரிவித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது.

நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.எம்.மதுரா செந்தில் தலைமை தாங்கினார்.கூட்டத்தில் மாநில திமுக வர்த்தக அணி துணைத் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் மாவட்ட திமுக செயலாளருமான கே.எஸ்.மூர்த்தி, ஒன்றிய திமுக செயலாளர் எம். தங்கவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் பேசுகையில், பெண்களுக்கு, மகளிர் உரிமைத் தொகை, கொரோனா காலத்தில் அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உதவி தொகை நான்காயிரம் வழங்கவில்லை. ஆனால் ஸ்டாலின் வழங்கினார். மக்களின் கஷ்டங்களை அறிந்து அதற்கு உதவுவதுதான் திமுக அரசு. இதனால் பொதுமக்களின் பாரம் நீங்கியது. மக்கள் மீது அக்கறை கொண்ட முதல்வர், அறிவித்த திட்டங்களை எல்லாம் செயல்படுத்தி வருகிறார், பயிர் கடன் தள்ளுபடி, மகளிரின் பாரத்தை குறைக்க வைத்து தனி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

கொரோனா காலத்தில் மாணவ/ மாணவிகளின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, இல்லம் தேடி கல்வித் திட்டத்தை செயல்படுத்தினார். இதனை தொடர்ந்து மக்களை தேடி மருத்துவம், அறிவிக்காத தேர்தல் வாக்குறுதிகள், முதியோர்களின் உடல்நலம் மற்றும் குழந்தைகளின் கல்வி தடைபடக்கூடாது என்பதற்காக, காலை உணவு திட்டம் கொண்டுவரப்பட்டது. இத்திட்டத்தை பிற மாநிலங்கள் மற்றும் கனடா அரசு கொண்டு வந்துள்ளது. அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள், மருத்துவம், பொறியியல், வேளாண்மை உயர்கல்வி பெறுவதற்காக மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.

இதன் மூலம் பெற்றோர்களின் சுமை குறைகிறது. இதுபோன்ற திட்டங்களை பாஜக கொண்டு வரவில்லை. ஆனால் கேஸ் விலை, பெட்ரோல் விலைவாசி உயர்வு , அரிசி, பருப்பு விலைவாசி உயர்ந்துள்ளது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுகின்றனர். மத்தியில் இந்தியா கூட்டணி அரசு அமைந்த கேஸ் விலை 500 ரூபாயாக குறைக்கப்படும். பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு 30 ரூபாய் குறைக்கப்படும். ஏற்கனவே தமிழ்நாடு அரசு பெட்ரோல் விலை ரூ.3 குறைத்துள்ளது. பால் விலையும் குறைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு செய்ய வேண்டிய திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார். அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் மக்கள் நலம் பெற வேண்டும் என்பதற்காக இத்திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார்

. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு வருடம் ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கும் மகாலட்சுமி திட்டம் செயல்படுத்தப்படும். நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகள் அகற்றப்படும். பெற்றோர்கள் வாங்கியுள்ள கல்வி கடன் தள்ளுபடி செய்யப்படும். இது போன்ற வாக்குறுதிகளை இந்தியா கூட்டணி வழங்கி உள்ளது. விலைவாசி உயர்வு பாஜக அரசின் அட்டூழியங்கள், அதிமுக அரசு செய்யத் தவறிய வாக்குறுதிகள் ஆகியவற்றை சிந்தித்துப் பார்த்து திமுக வாக்குறுதிகளை சிந்தித்துப் பார்த்து இந்த தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். நாமக்கல் மாவட்டத்திலேயே எலச்சிபாளையம் பகுதி சேர்ந்தவர்கள் அதிக அளவில் சென்று உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து. வேட்பாளர் மாதேஸ்வரனை வெற்றி பெற செய்ய வேண்டும். என்றும் அமைச்சர் மதிவேந்தன் பேசினார்.

கூட்டத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி துணைப் பொதுச் செயலாளர் சக்தி கோச் நடராஜ், பட்டிமன்ற பேச்சாளர் மஞ்சுநாதன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பாலாஜி, தகவல் தொழில் நுட்ப அணி நிர்வாகிகள் கௌதம், கருணா, அயலக அணி நிர்வாகி சாதிக் பாஷா, சத்தியராஜ் மற்றும் திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story