மது விலையை உயர்த்தி மகளிர் உரிமைத்தொகையை ஐந்து மடங்கு திரும்பெறுகிறது திமுக அரசு - முன்னாள் அமைச்சர் குற்றசாட்டு

பெண்கள் உரிமைத் தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கிவிட்டு மதுபான பாட்டிலுக்கு விலை உயர்த்தி ஆண்கள் மூலம் ஐந்து மடங்கு திமுக அரசு திரும்ப பெருவதாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பொன்விழா மைதானத்தில் அதிமுக கட்சியின் 52 வது ஆண்டு துவக்கவிழாவை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது இந்த பொது கூட்டத்தை இராஜபாளையம் வடக்கு நகர செயலாளர் துரை முருகேசன் ஏற்பாட்டில் நடைபெற்றது.இந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் .திமுக பாடுபட்டு பெயர் வாங்க வேண்டும் இவர்கள் குற்றம் கண்டு பேர் வாங்கி வருகிறார்கள் விளம்பராட்சி நிரந்தரமாகாது என திமுக அரசு மீது குற்றச்சாட்டு முன் வைத்தார் .அதிமுக ஆட்சிக்காலத்தில் ஏழை எளிய மக்களுக்கு பாகுபாடு இல்லாமல் அனைத்து திட்டங்கள் வழங்கப்பட்டன ஆனால் தற்போது திமுக அரசில் வழங்கப்படும் மகளிர் உரிமைத்தொகை என்ற பெயரில் 40% பேருக்கு தான் பணம் வழங்கப்பட்டு வருகிறது அதிலும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு மதுபானத்திற்கு விலை ஏற்றியுள்ளனர். ஆண்கள் குடிப்பதற்கு வழி செய்து விட்ட திமுக அரசு மேலும் ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு அதில் ஐந்து மடங்கு வருவாயை ஈட்டி வருகிறது என குற்றச்சாட்டை முன்வைத்தார். மேலும் தமிழகத்தில் சரியான ஆளுமை இல்லாத ஆட்சி நடைபெற்று வருகிறது இந்த ஆட்சியினால் மின்சார கட்டணத்தை உயர்த்தியதால் குறிப்பாக இராஜபாளையம் பகுதியில் நூற்பாலைகளுக்கு பிரச்சனை இராஜபாளையம் மட்டுமல்லாமல் ஸ்ரீவில்லிபுத்தூரில் பால் கிடைக்கவில்லை பால்கோவா தயாரிப்பதில் பிரச்சனை சிவகாசியில் பட்டாசு பிரச்சனை விருதுநகரில் பருப்புக்கு பிரச்சனை அருப்புக்கோட்டையில் நெசவாளர்கள் பிரச்சனை இது போன்று தமிழக முழுவதும் பல பிரச்சினைகள் உள்ளது . இந்த நிலைமாற வேண்டும் என்றால் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதியிலும் அதிமுக வெற்றி பெற வேண்டும் அதற்கு தொண்டர்கள் பாடுபட வேண்டும் யார் பிரதமர் என எடப்பாடி தீர்மானிக்க வேண்டும் இல்லை எடப்பாடி பிரதமராக வேண்டும். தற்போது ஆளுநர் வீட்டு முன்பு வன்முறை கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் வன்முறை தமிழக முதல் முழுவதும் வன்முறைகள் தலைவிரித்து ஆடுகிறது. திமுக அரசுக்கு இவ்வளவு விரைவில் கெட்ட பெயர்

வரும் என எதிர்பார்க்கவில்லை அந்த அளவிற்கு திமுக ஆட்சி மீது கெட்ட பெயர். மக்கள் திமுக அரசு எப்போது வீட்டுக்கு செல்லும் என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர் என்று பேசினார். ஆகையால் வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் அடுத்து நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக வெற்றி பெற கட்சி தொண்டர்களும் பொதுமக்களும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.என்றார்

Tags

Next Story