திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்த முடிவு
திமுக ஆலோசனை கூட்டம்
மதெற்கு ஒன்றிய திமுக சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் - கலைஞர் நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம், சிவகங்கையில் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் ஜெயராமன் தலைமை வகித்தார். இதனைத் தொடர்ந்து கலைஞர் நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடுவது மற்றும் இளைஞர் அணி மாநாட்டில் அதிகளவில் பங்கேற்பது உள்ளிட்டவைகள் விவாதிக்கப்பட்டது.
மேலும் இக்கூட்டத்தில் ஒன்றிய துணைச் செயலாளர் பஞ்சவர்ணம், மாவட்ட பிரதிநிதிகள் மனோகரன், தியாகராஜன், பாண்டியராஜன், மாவட்ட மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளர் திலகவதிகண்ணன், ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் சிங்கமுத்து,
ஒன்றிய மாணவரணி அமைப்பாளர்கள் மூக்குத்திபாலா, அழகுசுந்தரம் மற்றும் மாவட்ட, ஒன்றிய கிளைக்கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தங்கச்செல்வம் நன்றியுரை கூறினார்.
Next Story