பாஜவுடன் திமுக கள்ளக்கூட்டணி வைத்துள்ளது; கே பி முனுசாமி விமர்சனம்

பாஜவுடன் திமுக கள்ளக்கூட்டணி வைத்துள்ளது;  கே பி முனுசாமி விமர்சனம்

முதல்வர் ஸ்டாலின் பாஜவுடன் கள்ளக்கூட்டணி வைத்துள்ளார் என, அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி விமர்சித்துள்ளார். 

முதல்வர் ஸ்டாலின் பாஜவுடன் கள்ளக்கூட்டணி வைத்துள்ளார் என, அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி விமர்சித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், கிருஷ்ணகிரி நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், அதிமுக துணை பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே பி முனிசாமி பங்கேற்று, அதிமுக சார்பில் போட்டியிடும் வி. ஜெயபிரகாஷ் , வேட்பாளராக அறிமுகம் செய்து வைத்து, கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இடையே பேசினார். அவர் பேசும்போது, பிஜேபிக்கும், அதிமுகவுக்கும் கள்ள உறவு இருப்பதாக ஸ்டாலின் விமர்சிக்கிறார்.

நாங்கள் கள்ள உறவு வைக்க இல்லை. நீங்கள்தான் பிஜேபியுடன் கள்ள உறவு வைத்துள்ளீர்கள். முதலமைச்சராக பதவி ஏற்ற பின்பு பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வந்த போது "கோ பேக் மோடி..." என்று ஸ்டாலின் கூறியதோடு கருப்புக் கொடியும் காட்டினார். ஆனால் இரண்டு ஆண்டுகள் கழித்து தற்பொழுது "வெல்கம் மோடி..என்று, கூறி ரத்தின கம்பளம் விரித்து வரவேற்கிறார்.

இரண்டு ஆண்டுகளில் என்ன ஆயிற்று.? கோ பேக் மோடி..என்ற மோடியை வெல்கம் என்று சொல்லும் ஸ்டாலின் தான், ஏதோ ஒன்றில் மாட்டிக் கொண்டிருக்கிறார். மேடைகளில் ஏதோ பேசுகிறார். உள்ளூர அவருக்கு பயம் இருக்கிறது. மீண்டும் ஏதாவது பிரச்சனை வந்தால் சரண் அடைந்து விடுவது என்ற பயம். ஆனால், நாங்கள் சரணடைய மாட்டோம். சரணடையும் இயக்கம் அண்ணா திமுக இல்லை... என அவர் பேசினார். இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பி பாலகிருஷ்ண ரெட்டி, கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் அசோக் குமார், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story