குடியாத்தத்தில் தி.மு.க. சார்பில் முப்பெரும் விழா!
குடியாத்தத்தில் திமுக சார்பில் நடந்த முப்பெரும் விழாவில் எம் எல் ஏ பங்கேற்றார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் 26-வது வட்ட தி.மு.க. சார்பில் நெல்லூர்பேட்டை பகுதியில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு முப்பெரும் விழா நடைபெற்றது. நகரமன்ற உறுப்பினர் கே.வி.கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் எம்.எல்.ஏ. அமலுவிஜயன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பிரியாணி வழங்கினார்.
நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன் கட்சி கொடி ஏற்றி வைத்தார், குடியாத்தம் மேற்கு ஒன்றிய செயலாளர் கள்ளூர் ரவி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிகுழு உறுப்பினர் டி.கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் ஒன்றியக்குழு துணைத்தலைவர் சி.ஏ.ஏகாம்பரம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் எம்.சத்தியமூர்த்தி, தங்கம்சங்கரன் உள்பட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.