சேலத்தில் தி.மு.க. சார்பில் சட்டசபை தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
பைல் படம்
சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் டி.எம்.செல்வகணபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 'இல்லம்தோறும் ஸ்டாலினின் குரல்' என்ற தலைப்பில் திண்ணை பிரசாரம், மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழா, திராவிட மாடல் அரசின் சாதனைகள் மற்றும் அரசின் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டங்கள் தொடர்பாக சேலம் மேற்கு மாவட்டத்துக்குட்பட்ட எடப்பாடி, மேட்டூர், சங்ககிரி சட்டசபை தொகுதிகளில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
அதன்படி எடப்பாடி சட்டசபை தொகுதிக்கு இன்று (சனிக்கிழமை) மாலை 3.30 மணிக்கு நைனாம்பட்டியில் உள்ள நடராஜன் மஹால் திருமண மண்டபத்திலும், மேட்டூர் தொகுதிக்கு நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.30 மணிக்கு நவப்பட்டி ஊராட்சியில் உள்ள திருமலை மாதவி மகாலிலும், சங்ககிரி தொகுதிக்கு காலை 11 மணிக்கு பவானி மெயின் ரோடு வாசுதேவ் மஹால் திருமண மண்டபத்திலும் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.
இந்த கூட்டத்துக்கு அந்தந்த தொகுதிக்குட்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள், மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னாள், சட்டசபை, நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகளின் நிர்வாகிகள், கிளை, வார்டு செயலாளர்கள், பாக நிலை முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் உள்பட அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.