வாசுதேவநல்லூரில் திமுக விளக்கப் பொதுக்கூட்டம்
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் 'உரி மைகளை மீட்க ஸ்டாலினின் குரல்' விளக்கப் பொதுக்கூட்டம் வருகிற 18ம் தேதி நடைபெறுகிறது. இது குறித்து வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தென்காசி நாடாளு மன்ற தொகுதியில் 'உரிமை களை மீட்க ஸ்டாலினின் குரல்' விளக்கப் பொதுக் கூட்டம் வாசுதேவநல்லூர் காமராஜர்திடல், கலைஞர் நூற்றாண்டு மேடையில் வருகிற 18ம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.
கூட்டத்திற்கு தென்காசி வடக்கு மாவட்ட செய லாளர் ராஜா எம்எல்ஏ தலைமை வகிக்கின்றார். தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயபா லன், தென்காசி எம்பி தனுஷ் குமார் ஆகி யோர் முன்னிலை வகிக்கின்றனர். தலைமை செயற் குழு உறுப்பினர் யூஎஸ்டி சீனிவா சன் வரவேற்புரை நிகழ்த்துகிறார். வாசுதேவநல்லூர் பேரூர் செயலாளர் ரூபி பாலசுப்ரமணியன் நிகழ்ச் சியை தொகுத்து வழங்குகி றார்.
நிகழ்ச்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மீட்பு துறை அமைச்சர் கே.கே. எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்தி ரன், சபாபதி மோகன் ஆகி யோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றனர். இந்த கூட்டத்தில் ஒருங்கி ணைந்த தென்காசி வடக்கு, தெற்கு மாவட்டத்தை சேர்ந்த மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வா கிகள், சார்பு அணி நிர்வா கிகள், உள்ளாட்சி பிரதிநிதி கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.