முதல்வரின் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் திமுகவினர் ஆய்வு
தர்மபுரிக்கும் வரும் 11ம் தேதி பல்வேறு அரசு விழாக்களில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் வரவுள்ள நிலையில், நிகழ்ச்சி நடக்குமிதத்தை தி.மு.க.வினர் ஆய்வு செய்தனர்.
தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு அரசு விழாக்களில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வரும் திமுக தலைவருமான முக ஸ்டாலின், வருகின்ற மார்ச் மாதம் 15 ஆம் தேதி தர்மபுரி மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார்.
இதனை அடுத்து தர்மபுரி சட்டமன்ற தொகுதி தர்மபுரி நகர பகுதியில் அமைந்துள்ள அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் நிகழ்ச்சி நடைபெற இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி, மேற்கு மாவட்ட செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் ஆகியோர் அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் விழா மேடை மற்றும் பந்தல் அமைக்கும் இடத்தை தேர்வு செய்து ஆய்வு மேற்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உட்பட ஏராளமானோர் உடன் இருந்தனர்.
Next Story