சுவாசிக்கும் காற்றை தவிர மற்ற அனைத்திலும் ஊழல் செய்வது திமுக

சுவாசிக்கும் காற்றை தவிர மற்ற அனைத்திலும் ஊழல் செய்வது திமுக

பாஜக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

சுவாசிக்கும் காற்றை தவிர மற்ற அனைத்திலும் ஊழல் செய்வது திமுக அதற்கு துணை போவது மானங்கெட்ட காங்கிரஸ், ஊத்தங்கரையில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட பாஜக வேட்பாளர் நரசிம்மன் பேசினார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் பாஜக கிருஷ்ணகிரி மக்களவை தொகுதி வேட்பாளர் நரசிம்மன் புதன்கிழமை ஊத்தங்கரை ஒன்றியத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில் ஊழல் ஆட்சியை தூக்கி எறிந்து, மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செய்து வரும் பாஜக ஆட்சிக்கு ஆதரவு தரக்கோரினார்.

சுவாசிக்கும் காற்றைத் தவிர அனைத்திலும் ஊழலில் மூழ்கியிருக்கும் திமுக, அரசை தூக்கி எறிய வேண்டும். தமிழகத்தை சீரழிக்கும் மது, குட்கா, கஞ்சா, போன்றவை தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறது அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

ஊத்தங்கரை கூட்டுறவு நூற்பாலை தனியார் மையம் செல்வதை தடுத்து புனரமைத்து, ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தருவேன் என வாக்குறுதி அளித்தார். விவசாயிகளின் வாழ்க்கை தரம் உயர வாக்களிப்பீர் தாமரைச் சின்னத்திற்கு மூன்றாவது முறையாக நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக்க வேண்டும் என தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அவருடன் பாஜக மாவட்டத் தலைவர் சிவப்பிரகாஷ், சட்டப்பேரவை தொகுதி பொறுப்பாளர் எம்.ஆர். ராஜேந்திரன், பாமக மாவட்ட செயலாளர் ராஜசேகரன், அமமுக மாவட்ட கழக இணைச் செயலாளர் கண்மணிசிவக்குமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story