திமுக தான் நேரடி எதிரி: முன்னாள் அமைச்சர்

திமுக தான் நேரடி எதிரி: முன்னாள் அமைச்சர்

கூட்டத்தில் பேசும் முன்னாள் அமைச்சர்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நடந்த அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டத்தில் தி.மு.க., தான் எதிரி என எஸ்.பி வேலுமணி பேசினார்.

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் அ.தி.மு.க., செயல்வீரர்கள் மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டம் முன்னாள் அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்ற தேர்தல் பொறுப்பாளரான எஸ்.பி., வேலுமணி தலைமையில் நடந்தது.

எஸ்‌.பி வேலுமணி மேடைக்கு வந்து சுமார் 20 நிமிடங்களுக்கு பிறகு தான் வேட்பாளர் லோகேஷ் தமிழ் செல்வன் மேடைக்கு வந்தார். சிறிது நேரத்திற்கு பிறகு அவரது தந்தையும் முன்னாள் சபாநாயகருமான அன்பாலும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டுண்டார்.

நிகழ்ச்சியில் எஸ்.பி வேலுமணி பேசுகையில், கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் நீலகிரிக்கு எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தி உள்ளோம். தி.மு.க., அரசு பொறுப்பேற்று 3 ஆண்டுகளாகியும் எந்த திட்டங்களையும் கொண்டு வரவில்லை. மத்தியில் 35 தி.மு.க., எம்.பி.,க்கள் இருந்தும் தமிழகத்திற்கு எந்த முன்னேற்றமும் இல்லை. 5 ஆண்டு கால ஆட்சியும் முடிந்து விட்டது. தி.மு.க., மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கு சிறந்த வேட்பாளரை கட்சி அறிவித்துள்ளது. வெற்றி பெற அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும். ஒரு பூத்துக்கு குறைந்தது 350 ஓட்டுக்கள் வாங்க இலக்கு நிர்ணயித்து பாடுபட வேண்டும். அதற்கு மேல் ஓட்டு வாங்கினால் பாராட்டுகிறோம்.

நமக்கு எதிரி தி.மு.க., தான், நீலகிரி நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., வுக்கும் தான் நேரடி போட்டி உள்ளது. பா.ஜ.க., 5 சதவீதம் ஓட்டுக்கள் வைத்துள்ளனர். 10 சதவீதம் ஓட்டுக்கள் வாங்கினாலும் பா.ஜ.க., வெற்றி பெற முடியுமா என்ன? வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச் செல்வனை குறைந்தது 50 ஆயிரம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்," என்றார்.

Tags

Next Story