சமூகநீதி பற்றி பேசுவதற்கு திமுகவிற்கு தகுதியில்லை: அண்ணாமலை

சமூகநீதி பற்றி பேசுவதற்கு திமுகவிற்கு தகுதியில்லை: அண்ணாமலை

அண்ணாமலை பிரச்சாரம் 

சமூகநீதி பற்றி பேசுவதற்கு திமுகவிற்கு தகுதியில்லை என சேலத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சேலம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் அண்ணாதுரையை ஆதரித்து நேற்று இரவு அம்மாபேட்டை ரவுண்டானா பகுதியில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:- பிரதமர் நரேந்திர மோடி தான் 3-வது முறையாக ஆட்சி செய்ய போகிறார் என்று தெரிந்தே நடக்கிற தேர்தல் இதுவாகும். ஆனால் இந்தியா கூட்டணியில் பிரதமர் யார்? என தெரியாமல் களத்தில் நிற்கிறார்கள். பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு தற்போது உலகளவில் 5-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் 3-வது பெரிய பொருளாதார நாடாக மாறும். தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான அமைச்சரவையில் உள்ள 35 பேரில் 2 பெண்கள் மட்டுமே உள்ளனர். 11 அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் உள்ளன. எனவே சமூக நீதி பற்றி பேசுவதற்கு தி.மு.க.விற்கு எந்த தகுதியும் இல்லை. கடந்த 2014-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் உள்கட்டமைப்பு வசதிக்காக ரூ.1 லட்சத்து 17 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்தாண்டு பிப்ரவரி மாதம் நாட்டின் உள்கட்டமைப்புக்காக ரூ.11 லட்சம் கோடியை பிரதமர் மோடி ஒதுக்கி உள்ளார். இந்த 33 மாதங்களில் தி.மு.க. உள்கட்டமைப்புக்கு என்று என்ன ஒதுக்கி உள்ளது?. சேலம் மாநகரில் குண்டும், குழியும் இல்லாத சாலையை காட்டினால் நான் அரசியலை விட்டு விலகி விடுகிறேன். இந்த தேர்தலில் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் பா.ஜனதா கூட்டணி வெற்றி பெறும். இவ்வாறு அவர் பேசினார். பிரசார கூட்டத்தில் அருள் எம்.எல்.ஏ., த.மா.கா. சேலம் மாநகர மாவட்ட தலைவர் உலகநம்பி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story