விலைவாசி உயர்வுக்கு திமுக தான் காரணம் - அதிமுக வேட்பாளர் பிரசாரம்

பெத்தநாயக்கன்பாளையத்தில் நடந்த பிரச்சாரத்தின் போது விலைவாசி உயர்வுக்கு திமுக அரசு காரணம் எனக் கூறி கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் குமரகுரு பிரச்சாரம் மேற்கொண்டார்.
கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் குமரகுரு ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் சேலம் புறநகர் மாவட்ட செயலாளர்கள் இளங்கோவன் எம்எல்ஏ ஜெய்சங்கரன் தேமுதிக சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் இளங்கோவன் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் இணைந்து பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள பொதுமக்களிடம் திமுக ஆட்சியில் மின்கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, வீட்டு வரி உள்ளிட்ட உயர்வுக்கு காரணம் திமுக அரசு தான் என குற்றம் சாட்டியும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப அனைவரும் அதிமுகவிற்கு வாக்களித்து அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story