திமுக பொய்களின் பிறப்பிடமாய் உள்ளது - முருகானந்தம்
முருகானந்தம் பேட்டி
திருப்பூர் வித்யாலயம் பகுதியில் உள்ள பாஜக அலுவலகத்தில் பாஜக மாநில பொதுச் செயலாளர் ஏ பி முருகானந்தம் பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, ஜனவரி 28ஆம் தேதி திருப்பூருக்கு என் மண் என் மக்கள் யாத்திரையில் பாஜக தலைவர் அண்ணாமலை வர உள்ளதாக தெரிவித்த அவர் அடுத்த மாதம் யாத்திரை முடிவடையவுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள உள்ளார் சுமார் 10 லட்சம் பேர் கலந்து கொள்ளும் வகையில் தமிழகத்தில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவித்தார்.மேலும் அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா கொண்டாட்டத்தை தமிழகத்தில் முடக்க நினைத்தது வருத்தமளிப்பதாக தெரிவித்த அவர். பொய்களின் வாட்சப் யூனிவர்சிட்டி என பாஜக சார்ந்தவர்களை விமர்சித்த முதல்வரின் கருத்துக்கு பதில் அளித்த அவர் திமுக பொய்களின் பிறப்பிடமாய் உள்ளது எனவும் அவர்களின் செயல்களுக்குத்தான் நீதிமன்றங்கள் அறிவுறுத்தல் வெளியிட்டது என தெரிவித்தார் .