திமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் கூட்டம்

திமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் கூட்டம்

கலந்துரையாடல் கூட்டம் 

நாகை மாவட்ட திமுக தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட, தொகுதி, ஒன்றிய, நகர, பேரூர் ஒருங்கிளைப்பாளர்கள், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கந்துரையாடல் கூட்டம் மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்றது.

நாகை மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி கந்துரையாடல் கூட்டத்திற்கு தகவல் தொழில் நுட்ப அணி தஞ்சை மண்டல பொறுப்பாளர் பி.எம்.ஸ்ரீதர் தலைமை தாங்கினார். நாகை மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் அ.பாரிபாலன் வரவேற்றார். தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர்கள் எஸ்.செல்வமுத்துகுமரன், மா.ரெக்ஸ், எஸ்.ராபர்ட்கிங், காந்திமதிலோகநாதன். பரமேஷ்வரிவெங்கட் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் நாகை மாவட்டக் கழகச் செயலாளரும், தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத்தலைவர் என்.கௌதமன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள் செல்லமுருகன், கணேசன், வினோத், ஆத்மநாதன், மைதிலி, அந்தோனிடேவிட், இளையராஜா ஒன்றிய, நகர, பேரூர் ஒருங்கிணைப்பாளர்கள், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் கழகத் தலைவர் தளபதி அவர்களின் 40க்கு 40 என்ற இலக்கை எட்டும் வகையில் தகவல் தொழில் நுட்ப அணியின் சார்பில் பிரச்சார பணியை சிறப்பாக செய்திடுவது என்றும், இந்தியா கூட்டணியின் வேட்பாளராக நாகை நாடாளுமன்ற தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் வை.செல்வராஜ்க்கு நாகை மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி சார்பில் தாய் கழத்தோடு வீடு வீடாக சென்று பிச்சாரம் செய்யும் பணியில் ஈடுப்படுவது என்றும், தமிழக அரசின் சாதனைகளை தொடர்ந்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு பிரச்சாரப்பணியை செய்திடுவது என்றும், வரும் 23ம் தேதி திருவாரூர் கொரடாச்சேரில் கழகத்தலைவர் கலந்து கொள்ளும் நாகை, தஞ்சை நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தகவல் தொழில் நுட்ப அணியை சேர்ந்த நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்றும், 10 ஆண்டுகால ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியில் பொது துறை நிறுவனத்தை விற்பனை செய்தது, சி.ஏ.ஜி. அறிக்கையின் படி ரூ. 7.5 லட்சம் கோடி ஊழல், தேர்தல் பத்திரம் என்ற பெயரில் பி.ஜே.பி கட்சிக்கு ரூ. 10 ஆயிரம் கோடிக்கு மேல் நிதி நிறுவனங்களை மிரட்டி நிதி பெற்றது போன்ற வற்றை சமூக வலை தளத்தில் ஆதாரத்துடன் பதிவிட வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்ட்டது

Tags

Next Story