தேங்கா பட்டணத்தில் திமுக தகவல் தொழில் நுட்ப அணி  கூட்டம்.

தேங்கா பட்டணத்தில் திமுக தகவல் தொழில் நுட்ப அணி  கூட்டம்.
X
தி மு க ஆலோசனை கூட்டம்
குமரி மாவட்டம் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி திமுக தகவல் தொழில் நுட்ப அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தேங்காப்பட்டணத்தில் நடைபெற்றது. மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் அபிலாஷ் தலைமை வகித்தார். சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள் நெல்சன், பிரதாப் சந்திரன், சுகன்யா முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட அவைத்தலைவர் மரிய சிசுகுமார், பொருளாளர் ததேயு பிரேம்குமார், முஞ்சிறை கிழக்கு ஒன்றிய செயலாளர் மாஸ்டர் மோகன், கிள்ளியூர் தெற்கு ஒன்றிய செயலாளர் கோபால், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ஜெயசேகர் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். கூட்டத்தில் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி சார்பில் ஐம்பதாயிரம் நீட் விலக்கு கையெழுத்துக்கள் பெறப்பட வேண்டும் என்று கலந்து கொண்ட அணி நிர்வாகிகள் சார்பில் முடிவு செய்யப்பட்டது.

Tags

Next Story