அண்ணாமலை மீது தேர்தல் அலுவலரிடம் திமுக வழக்கறிஞர் அணியினர் புகார்

அண்ணாமலை மீது தேர்தல் அலுவலரிடம் திமுக வழக்கறிஞர் அணியினர் புகார்

திமுக வழக்கறிஞர் அணியினர் 

மக்களவை தேர்தலில் குறுக்கு வழியில் வெற்றி பெற பாஜக தில்லு முல்லு வேலைகள் செய்து வருவதாக குற்றம்சாட்டி திமுக வழக்கறிஞர் அணியினர் தேர்தல் அலுவலரிடம் புகார் அளித்தனர்.

கோவை நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை தேர்தல் விதிமுறைகளை மீறி பிரச்சாரத்தில் ஈடுபடுவதோடு மட்டும் இன்றி கலவரத்தை தூண்டும் விதமாக ஆவாரம்பாளையத்தில் திமுக உள்ளிட்ட இந்திய கூட்டணி கட்சியினரை பாஜகவினர் தாக்குதல் நடத்தியதுடன் கலவரத்தை தூண்ட முயற்சிப்பதாகவும் இது தொடர்பாக ஏற்கனவே அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், தேர்தல் விதிமுறைகளை மீறி இணையத்தளம் மூலம் வாக்குசீட்டு பெற்றுக்கொள்ளலாம் என்று கூறி அதில் மோடி, அண்ணாமலை புகைப்படம் மற்றும் தாமரை சின்னம் மூலம் பாஜக பிரச்சாரம் மேற்கொணடதாகவும், தேர்தல் ஆணையத்திற்கு உட்பட்ட கியூ ஆர் கோடு திருடப்பட்டதாகவும் வாக்காளரின் முழு தகவல்களையும் திருடப்பட்டுள்ளதாக கூறி பாஜக மாநில தலைவரும் கோவை வேட்பாளருமான அண்ணாமலை மீது தேர்தல் அதிகாரியிடம் திமுக வழக்கறிஞர் அணி அமைப்பாளர் அன்புசெழியன் தலைமையில் திமுக வழக்கறிஞர்கள் புகார் அளித்தனர். தேர்தல் ஆணையத்தின் கியூ ஆர் கோடு திருடப்பட்டதுடன், வாக்காளர்களின் முழு விபரமும் திருடப்பட்டதாக புகார் அளித்துள்ளதாக தெரிவித்தனர்.

Tags

Next Story