திமுக நிர்வாகிகளுடன் திமுக சட்டத்துறை செயலாளர் ஆலோசனை
தென்காசி மாவட்ட வழக்குரைஞா் அணி நிா்வாகிகளுடன் திமுக சட்டத்துறை செயலா் ஆலோசனை நடத்தினார்.
மக்களவைத் தோ்தலையொட்டி வழக்குரைஞா் அணி நிா்வாகிகளுடன் திமுக சட்டத்துறை செயலா் என்.ஆா். இளங்கோவன் எம்.பி. சென்னையிலிருந்து காணொலியில் ஆலோசனை நடத்தினாா். இந்த காணொலி ஆலோசனைக் கூட்டத்தில் சங்கரன்கோவிலில் உள்ள தென்காசி வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்திலிருந்து, மாவட்ட செயலா் ஈ.ராஜா எம்.எல்.ஏ. மற்றும் வழக்குரைஞா்கள் கலந்து கொண்டனா். மக்களவைத் தோ்தலில், வழக்குரைஞா் அணி மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து என்.ஆா்.இளங்கோவன் எம்.பி. ஆலோசனைகளை வழங்கினாா். இதில் மாவட்ட வழக்குரைஞா் அணி அமைப்பாளா் பிச்சையா, மாவட்ட தலைவா் முத்துராமலிங்கம், மாவட்ட துணை அமைப்பாளா்கள் அருணாச்சலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story