நாமக்கல்லில் திமுக லோக்சபா தேர்தல் பரப்புரை கூட்டம்

நாமக்கல்லில் திமுக லோக்சபா தேர்தல் பரப்புரை கூட்டம்

திமுக

நாமக்கலில் வருகிற பிப்ரவரி 16இல் நாமக்கல் பூங்கா சாலையில் பரப்புரை கூட்டம் நடைபெறுகிறது.

நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் கே.ஆர்.என். ராஜேஸ்குமார், எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, விரைவில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது.

இதையொட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பின் பேரில், கடந்த 10 ஆண்டுகளில், மத்திய பாஜக அரசு, தமிழ்நாட்டிற்கு இழைத்த அநீதிகளையும், மத்திய அரசிடம் மாநிலத்தின் உரிமைகளை அடகு வைத்த அதிமுகவின் துரோகங்களையும், மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், முதற்கட்டமாக, உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் பரப்புரை நடைபெறுகிறது.

வருகிற பிப்ரவரி 16ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு நாமக்கல் பஸ்நிலையம் அருகிலுள்ள பூங்கா சாலையில், நாமக்கல் லோக்சபா தொகுதிக்கான பரப்புரை கூட்டம் நடைபெறுகிறது. மாவட்ட செயலாளர் கே.ஆர்.என். ராஜேஸ்குமார், எம்.பி. தலைமை வகிக்கிறார். தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார்.

நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில், சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் டி.எம்.செல்வகணபதி, நாமக்கல் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ ராமலிங்கம், சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ பொன்னுசாமி மற்றும் நாமக்கல் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட, நாமக்கல், சேந்தமங்கலம், ராசிபுரம், பரமத்தி வேலூர், திருச்செங்கோடு, சங்ககிரி ஆகிய சட்டசபை தொகுதிகளில் உள்ள நகராட்சி, டவுன் பஞ்சாயத்து தலைவர்கள்,

ஒன்றிய, நகர, பேரூராட்சி திமுக செயலாளர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், இளைஞர் அணி நிர்வாகிகள், அனைத்து சார்பு அணி நிர்வாகிகள், நகர் மன்ற கவுன்சிலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் அனைவரும் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story