திமுக லோக்சபா தேர்தல் அறிக்கை குழு சேலம் வருகை

திமுக லோக்சபா தேர்தல் அறிக்கை குழு சேலம் வருகை

திமுக தேர்தல் குழு

திமுக லோக்சபா தேர்தல் அறிக்கை குழு 11ஆம் தேதி சேலம் வருகை தரவுள்ளது.

திமுக லோக்சபா தேர்தல் அறிக்கை குழு வருகிற பிப்ரவரி 11 ந்தேதி சேலம் வருகை நாமக்கல் மாவட்ட அனைத்து சங்களுக்கு இராஜேஸ்குமார் எம்.பி. அழைப்பு தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவுரையின் பேரில், லோக்சபா தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, எம்.பி. கனிமொழி தலைமையில்,

தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு தரப்பினர், தொழில் சர்ந்த சங்க பிரதிநிதிகள், பொதுமக்கள், கட்சி நிர்வாகிகளை சந்தித்து, தேர்தல் அறிக்கைக்கான பரிந்துரைகளை கேட்டு வருகிறது. அதன்படி,

வருகிற பிப்ரவரி 11 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர், சேலம், ரேடிசன் ஓட்டலுக்கு வருகை தருகின்றனர். நாமக்கல் லோக்சபா தொகுதியின் வளர்ச்சியில் அக்கறை கொண்ட தமிழ்நாடு முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம், தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கம். தமிழ்நாடு கோழி மற்றும் முட்டை பொருட்கள் ஏற்றுமதி சங்கம், லாரி உரிமையாளர்கள் சங்கம், லாரி டிரைவர்கள் சங்கம்,

லாரி பாடி பில்டர் சங்கம், பால் உற்பத்தியாளர்கள் சங்கம், விசைத்தறி நெசவாளர்கள் சங்கம், விவசாய முன்னேற்ற சமூக சங்க கூட்டமைப்பு, பழங்குடியினர் நலமக்கள் மற்றும் வளர்ச்சி சங்கம், சிறு, குறு விவசாயிகள் சங்கம், வணிகர் சங்கங்கள், விவசாயிகளின் பிரதிநிதிகள், தொழில் முனைவோர்,

தொழிற்சங்கள், மாணவர் சங்கங்கள், அரசு ஊழியர்களின் பிரிநிதிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும், தங்களது நிறுவனம், தொழில் அமைப்புகள், சங்கங்கள் தொடர்பான மத்திய அரசின் சார்பில் நிறைவேற்ற வேண்டிய கோரிக்கை மனுக்கள் மற்றும் ஆலோசனைகளை, தேர்தல் அறிக்கைகுழுவினரிடம் நேரிலிலோ, கடிதம் மூலமாகவோ வழங்கலாம்.

மேலும், dmkmanifesto2024@dmk.in வெப்சைட் முகவரியிலும் கோரிக்கைகளை வழங்கலாம். மேலும் தொலைபேசி எண் : 08069556900, வாட்ஸ்அப் : 9043299441, ட்வீட் : #DMKManifesto2024 , பேஸ்புக் பக்கம் : DMKManifesto2024 என கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம்.பி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story