அதிமுகவை அழிக்க பல்வேறு சதிகளை திமுக செய்த்து - எடப்பாடி பழனிசாமி
கூட்டத்தில் பேசும் எடப்பாடி பழனிச்சாமி
ஈரோடு அருகேயுள்ள கஸ்பாபேட்டையில் ஈரோடு நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் அசோக்குமாரை ஆதரித்து அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி பரப்புரையில் ஈடுபட்டார் இதில் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன் , தங்கமணி , வேலுமணி , கே.வி.ராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பொதுமக்களிடையே பேசிய அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் அதிமுக மலர வேண்டும் என மக்கள் நினைப்பதாகவும் , திமுகவை எப்போது வீட்டிற்கு அனுப்புவீர்கள் என கேட்கின்றனர். வாரிசு அரசியலுக்கு சாவுமணி அடிக்கிற தேர்தல் என்றும் இந்தியாவில் அதிமுகவில் தான் அடிமட்ட தொண்டனும் உச்சபட்ச பதவிக்கு வரலாம் என்றார். திமுக ஆட்சியில் தொழில் மூதலீட்டு மாநாடு மூலம் வந்த தொழிற்சாலைகள் எதுவென்று தெரியவில்லை.
இது குறித்து வெள்ளை அறிக்கை கேட்டும் இதுவரை தரவில்லை என்றும் அதிமுகவை முடக்க அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்வதாகவும் இதற்கு எல்லாம் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் பதில் சொல்லனும் என்ற எடப்பாடி பழனிசாமி அதிமுகவை ஒடுக்க , முடக்க , அழிக்க பல்வேறு சதிகளை திமுக செய்த்து்.இதை முடியடித்தது அதிமுக என்றார்.
அதிமுக அரசில் ஈரோட்டிற்கு செய்த திட்டங்களை பட்டியலிட்ட எடப்பாடி பழனிசாமி தமிழர்கள் உரிமை காப்போம் தமிழகத்தை காப்போம் என்றும் ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம் எனக்கூறி பேச்சை நிறைவு செய்தார்