ஆத்தூர் : சேலம் கிழக்கு மாவட்ட கழக செயற்குழுக் கூட்டம் ஆத்தூர் திமுகவினர் கலந்துகொள்ள அழைப்பு
மாவட்ட செயலாளர்
சேலம் கிழக்கு மாவட்ட கழக செயற்குழு கூட்டம் 27-02-2024 செவ்வாய்க்கிழமை மாலை 3.00 மணிக்கு வாழப்பாடியில் உள்ள தளபதி மு.க.ஸ்டாலின் அறிவாலயம் கலைஞர் அரங்கில் கழக முதன்மை செயலாளர், மாண்புமிகு நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்களின் தலைமையில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்திற்கு மாவட்ட கழக நிர்வாகிகள், ஆத்தூர் நகர, ஒன்றிய, பேரூர் கழக செயலாளர்கள், நிர்வாகிகள், முன்னாள், இன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை கழக செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்ட தொகுதி பார்வையாளர்கள், தேர்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், கழகத்தின் துணை அமைப்புகளான அணிகளின் மாநில துணை அமைப்பாளர்கள், மாவட்ட தலைவர்கள், துணை தலைவர்கள், அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள்,
வாக்குசாவடி முகவர்கள் (BLA2), மற்றும் கழக முன்னோடிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் அழைப்பு விடுத்துள்ளார்.