புதுச்சத்திரத்தில் திமுக செயல்வீர்கள் கூட்டம் !

புதுச்சத்திரத்தில் திமுக செயல்வீர்கள் கூட்டம் !

திமுக செயல்வீர்கள் கூட்டம்

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய திமுக செயல்வீர்கள் கூட்டம் பாராளுமன்ற உறுப்பினர் கே.ஆர்.என் ராஜேஷ்குமார் தலைமையில் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் ராஜேஷ்குமார் எம்.பி, வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் கலந்து கொண்டனர்.

இந்தியா கூட்டணியின் திமுக வேட்பாளர் மாதேஸ்வரனை ஆதரித்தும், பாராளுமன்ற தேர்தல் பணிகள் குறித்தும் ஆலோசனை வழங்கி பேசினர்.

இக்கூட்டமானது நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.இராமலிங்கம், புதுச்சத்திரம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் எம்.பி.கௌதம், தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் ஜெய்பிரகாஷ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. மாநில இளைஞர் அணி துணை செயலாளர் ஆனந்தகுமார், கிளை கழக செயலாளர்கள், கிளை பிரதிநிதிகள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், சார்பு அணி நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் உட்பட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story