சிவன் கோவில் நிலத்தை திமுக பிரமுகர்கள் அபகரிக்க முயற்சி

சிவன் கோவில் நிலத்தை திமுக பிரமுகர்கள் அபகரிக்க முயற்சி

கோவில் நிலத்தை அபகரிக்க முயற்சி

தூத்துக்குடியில் சிவன் கோவில் நிலத்தை திமுக பிரமுகர்களுக்கு தாரை வார்த்து கொடுக்க முயற்சி நடப்பதாக இந்து மக்கள் கட்சி குற்றம்நாட்டியுள்ளது. 

தூத்துக்குடியில் சிவன் கோவில் நிலத்தை திமுக பிரமுகர்களுக்கு தாரை வார்த்து கொடுக்க முயற்சி நடப்பதாக இந்து மக்கள் கட்சி குற்றம்நாட்டியுள்ளது. இது தொடர்பாக இந்து மக்கள் கட்சி-தமிழகம் மாநில செயலாளர் தா_வசந்தகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தூத்துக்குடி அருள்மிகு சங்கர் ராமேஸ்வரர் திருக்கோவிலுக்கு சொந்தமான தூத்துக்குடி மாநகராட்சி பிரதான பகுதியான அழகேசபுரம் மெயின் ரோட்டில் அமைந்துள்ள பாரிவேட்டை மைதானம் சுமார் 6 ஏக்கர் பரப்பளவு கொண்டது. ஆளுங்கட்சி மற்றும் பல்வேறு அரசியலமைப்புகளின் கண்ணை உறுத்துக் கொண்டிருக்கக் கூடிய இந்த மைதானம், தற்போது மாநகராட்சி குப்பைகளை கொட்டி, பிரித்து கொண்டு செல்லக்கூடிய இடமாக பயன்படுத்திக் கொண்டிருக்கின்றது.

தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறையின் சார்பாக அவ்விடத்திலே ஏழை இந்து மாணவர்கள் பயன்பெறும் வகையிலேயே ஒரு கல்வி நிலையங்களை துவங்கப்பட வேண்டும் என்று இந்து மக்கள் கட்சியின் சார்பாக நீண்ட நெடு கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம். மேலும் பல்வேறு கோரிக்கை மனுக்கள் இது சம்பந்தமாக அறநிலையத்துறைக்கு இந்து மக்கள் கட்சியின் சார்பாக அளிக்கப்பட்டும் உள்ளது. இப் பகுதியில் அறநிலையத் துறையின் சார்பாக கடந்த காலங்களில் வணிக வளாகங்கள் மற்றும் கல்யாண மண்டபம் கட்டுவதற்காக வரைபடங்கள் தயார் செய்யப்பட்டது.

ஆனால் மாறாக இந்து சமய அறநிலைத்துறையின் உதவி ஆணையர் அலுவலகத்தை கட்டுவதற்காக அப்பகுதியில் 1ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு அதனை சுற்றி வேலிச்சுவர் அமைக்கப்பட்டு சுமார் 25 சென்ட் மட்டுமே அதில் உதவி ஆனையர் அலுவலகம் கட்டப்பட்டுள்ளது மீதி உள்ள 75 சென்ட் காலியாக தான் உள்ளது. தற்போதுள்ள திமுக அரசு மேலும் அவ்விடத்தில் ஒரு ஏக்கரை கையகப்படுத்தி அதில் இணை ஆணையர் அலுவலகத்தை கட்டுவதற்கு முனைப்பு காட்டி வருவதாக தெரிய வருகிறது. திருக்கோவிலுக்கு சொந்தமான இடத்தில் எந்தவித அரசு அலுவலகங்கள் கட்டுமானங்கள் கட்டக் கூடாது என்பது இந்து சமய அறநிலையத் துறையின் சட்ட விதி, மேலும் அப்படி திருக்கோவில் இடத்தில் அரசு அலுவலகங்கள் இருக்குமானால் அதற்குரிய வாடகை பணத்தை அறநிலையத்துறைக்கு செலுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் ஏற்கனவே இவ்விடத்தில் ஒரு ஏக்கர் நிலம் எடுக்கப்பட்டு அதில் உதவி ஆனையர் அலுவலகம் கட்டப்பட்டிருந்தாலும் அதற்கு பின்னாடி இருக்கக்கூடிய 75 சென்ட் இடம் ஆனது காலியாக தான் உள்ளது அவ்விடத்தில் அந்த இணை ஆணையர் அலுவலகத்தை கட்டி, அதற்குரிய வாடகை பணத்தை திருக்கோவில் கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டும். அவ்விடத்தை கொண்டு முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் அனைத்தும் திராவிட முன்னேற்றக் கழக அரசின் பிரமுகர்களுக்கு தாரை வார்த்து கொடுப்பதற்காக முயற்சிக்குப் படுகிறதோ என்ற ஐயம் ஏற்படுகிறது. பொதுமக்களும் பக்தர்களும் இதை கவனித்து தான் வருகிறார்கள் என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

தமிழக அரசு உடனடியாக அவ்விடத்தில் இணை ஆணையர் அலுவலகம் கட்டுவதற்கான திட்டத்தை கைவிடப்பட வேண்டும். அவற்றில் பக்தர்கள் மற்றும் இந்துக்கள் பயன்படக்கூடிய திட்டங்களைத் தான் செயல்படுத்த வேண்டுகிறோம். மேலும் அவ்விடத்தில் அருள்மிகு ஸ்ரீ பாகம்பிரியாள் கல்வி நிலையங்கள் துவங்கப்பட்டு ஏழை எளிய இந்துக்கள் பயன்பெறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சியின் சார்பாக கோரிக்கை விடுக்கிறோம். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story