பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் பிறந்தநாளை கொண்டாடிய தி.மு.க.,வினர்

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பிறந்தநாளை முன்னிட்டு மணப்பாறையில் திமுகவினர் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் நகர திமுகவின் சார்பில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பிறந்தநாளை முன்னிட்டு பேருந்து நிலையம் முன்பு, நகர செயலாளர் செல்வம் தலைமையில் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். இதேபோல் திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சுற்றுச்சூழல் அணி சார்பில் மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் வக்கீல் கிருஷ்ணகோபால் தலைமையில் பேருந்து நிலையம் அருகே பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story