திமுக எம்எல்ஏ மருத்துவமனையில் அட்மிட்!
சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுசாமி திடீர் நெஞ்சுவலி காரணமாக, கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுசாமி திடீர் நெஞ்சுவலி காரணமாக, கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் சட்டசபை தொகுதியில் (எஸ்டி), கடந்த 2021ம் ஆண்டு திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று எம்எல்ஏ ஆனவர் கே.பொன்னுசாமி. இவருக்கு சொந்தமான வீடு கொல்லிமலையில் உள்ளது. அடிவாரத்தில் உள்ள காரவள்ளியில் அவரது மகன் வசித்து வருகிறார். தற்போது பொன்னுசாமி லோக்சபா தேர்தல் பணிகளை கவனிப்பதற்காக, தனது மகன் வீட்டில் தங்கியிருந்தார். நடைபெற உள்ள தேர்தலில் நாமக்கல் மக்களவைத் தொகுதி திமுக கூட்டணி கட்சியான கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு வேட்பாளராக மாதேஸ்வரன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து சேந்தமங்கலம் சட்டப்பேரவை தொகுதியின் உறுப்பினர் பொன்னுசாமி கடந்த சில நாட்களாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார்.இந்த நிலையில் நேற்று மார்ச் 31ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் கோவைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., திடீரென உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைக்கு எம்.எல்.ஏ பொன்னுசாமியின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Next Story