திருப்பூரில் திமுக எம்.பி கனிமொழி அதிரடி: இடித்து அகற்றப்பட்ட சுவர்

திருப்பூரில் திமுக எம்.பி கனிமொழி அதிரடி: இடித்து அகற்றப்பட்ட சுவர்

இடித்து அகற்றப்பட்ட சுவர் 

சேவூரில் இரு சமூகத்தை பிரிக்கும் வகையில் (தீண்டாமை சுவர்) எழுப்பப்பட்டதாக புகார் திருப்பூரில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியிடம் மனு அளித்த நிலையில் உடனடியாக சுவர் இடிக்கப்பட்டது.

திருப்பூரில் இரு சமுகத்தை பிரிக்கும் வகையில் சுவர் ( தீண்டாமை சுவர் ) எழுப்பப்பட்டதாக புகார் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியிடம் மனு அளித்த நிலையில் உடனடியாக சுவர் இடிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் சேவூர் கைகாட்டி புதூர் பகுதியில் தேவேந்திரன் நகர் மற்றும் விஐபி நகர் என இரு பகுதிகள் உள்ளது. இரு பகுதிகளிலும் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தேவேந்திரன் நகர் பகுதியில் ஒரு சமூகத்தினரும் விஐபி நகர் பகுதியில் மற்றொரு சமூகத்தினரும் வாழ்ந்து வரக்கூடிய நிலையில்,

தேவேந்திரன் நகர் பகுதியில் இருந்து விஐபி நகர் வழியாக நியாய விலை கடை , இ சேவை மையம் மற்றும் பள்ளிகளுக்கு செல்ல முடியாத வகையில் தடுப்புச் சுவர் எழுப்பப்பட்டு இருப்பதாகவும் , இதன் காரணமாக தேவேந்திரன் நகர் பகுதியில் வசிக்கும் பொது மக்கள் சில கிலோமீட்டர் சுற்றி செல்ல வேண்டிய நிலை இருந்ததாக ஏற்கனவே மாவட்ட ஆட்சியர் , முதலமைச்சர் தனிப்பிரிவு

உள்ளிட்டவருக்கு மனு அளித்திருந்தனர். இந்நிலையில் எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் இன்று திருப்பூர் திருமுருகன் பூண்டி பகுதியில் உள்ள தனியார் விடுதியில் திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த நாடாளுமன்ற உறுப்பினரும் திமுகவின் துணைப் பொதுச் செயலாளருமான,

கனிமொழியிடம் கைகாட்டி புதூர் பகுதி பெண்கள் இப் பிரச்சனை தொடர்பாக மனு அளித்தனர். உடனடியாக மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மாவட்ட ஆட்சியரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டார்.

இதனைத் தொடர்ந்து மனு அளித்த ஒரு மணி நேரத்திற்குள்ளாக அப்பகுதியில் இரு சமூகத்தினரை பிரிக்கும் வகையில் எழுப்பப்பட்ட சுவர் ஜேசிபி வாகனம் மூலம் இடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மனு அளிக்க வந்த பெண்கள் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினரை சந்தித்து தங்கள் நன்றியை தெரிவித்தனர். மேலும் மறுபுறம் கட்டப்பட்டுள்ள சுவர்,

இடிக்கப்படாடதது குறித்து மீண்டும் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் திங்கட்கிழமைக்குள் மீதமுள்ள சுவர்களும் இடிக்கப்படா விட்டால் தனது கவனத்திற்கு கொண்டுவர நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்ததாக மனு அளித்த பெண்கள் தெரிவித்தனர்.

Tags

Next Story