பொங்கல் பரிசு தொகுப்பு நிகழ்வில் தி.மு.க நிர்வாகிகள் கலந்து கொள்க

பொங்கல் பரிசு தொகுப்பு நிகழ்வில் தி.மு.க நிர்வாகிகள் கலந்து கொள்க

தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்வில் தி.மு.கழக நிர்வாகிகளுக்கு கலந்து கொள்ள வேண்டும் - எஸ்.எம்.மதுரா செந்தில் அறிக்கை

தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்வில் தி.மு.கழக நிர்வாகிகளுக்கு கலந்து கொள்ள வேண்டும் - எஸ்.எம்.மதுரா செந்தில் அறிக்கை

தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்வில் திமுக நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும் என நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், நாட்டிற்கே முன்னோடியாய் திகழும் நம் திராவிட மாடல் ஆட்சியில் தமிழர் திருநாளாம் தமிழ் புத்தாண்டு மற்றும் தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 1000, பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு மற்றும் விலையில்லா வேட்டி, சேலை வழங்கப்படும் என கழக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவிப்பை தொடர்ந்து நாமக்கல் மேற்கு மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து நியாயவிலைக் கடைகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையிலும், நமது அரசின் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு பயனாளிகள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள், கிளை மற்றும் வார்டு கழக செயலாளர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைவரும் அந்தந்த பகுதிகளில் உள்ள நியாயவிலைக் கடைகளில் தவறாமல் கட்டாயம் கலந்து கொள்ளுமாறு மாவட்ட கழகத்தின் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது என அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Tags

Next Story