தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல் திறக்க வேண்டும்

தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல் திறக்க வேண்டும்

எவ வேலு

திருவண்ணாமலை மாவட்டம், முழுவதும் தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல் திறக்க வேண்டும் என அமைச்சர் எ.வ.வேலு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் கோடை வெப்பத்தை சமாளிக்கவும், பொது மக்களின் தாகம் தீர்க்கவும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தி.மு.க.வினர் தண்ணீர், மோர் பந்தல்களை திறந்திட வேண்டும். மேலும், திருவண்ணாமலை வடக்கு, தெற்கு மாவட்ட, நகர, ஒன்றிய,பேரூர் கழக நிர்வாகிகள், அணிகளின் நிர்வாகிகள் உடனடியாக தண்ணீர் பந்தல்களை அமைத்து, மக்கள் தாகம் தீர்க்க செயல்பட வேண்டும் என அமைச்சர் எ.வ.வேலு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags

Next Story