கடையம் தெற்கு ஒன்றிய பகுதியில் திமுக திண்ணை பிரசாரம்

கடையம் தெற்கு ஒன்றிய பகுதியில் திமுக திண்ணை பிரசாரம்

 திண்ணை பிரசாரம்

கடையம் தெற்கு ஒன்றிய பகுதியில் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் தலைமையில் திண்ணை பிரசாரம்.
தென்காசி மாவட்டம் கடையம் தெற்கு ஒன்றிய பகுதியில் நேற்று நடைபெற்ற இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல் திமுக திண்ணை பிரசாரத்தில் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான சுரேஷ் ராஜன் கலந்து கொண்டு வீடு, வீடாக சென்று திமுக அரசின் சாதனை விளக்க துண்டு பிரசுரங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். இதில் பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் அண்ணா தாசன், அவைத்தலைவர் பக்கீர் மைதீன், மாவட்ட கவுன்சிலர் மைதீன் பி வி கோதை மைதீன், துணைச் செயலாளர் முல்லையப்பன், பொருளாளர் சுடலைமுத்து, மாவட்ட பிரதிநிதிகள் அய்யன் சாமி, பெருமாள், கடையம் கிளை செயலாளர்கள் மருதப்பன், அழகிய நம்பி, காந்தி, அய்யன் சாமி, முத்தையா, மாரியப்பன், பி எல் 2 முகவர்கள் சுரேஷ், கோபாலகிருஷ்ணன், மாலையம்மாள், வலைதள பொறுப்பாளர் சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story