நாமகிரிபேட்டையில் திமுக கழக செயல்வீர்கள் கூட்டம் !

நாமகிரிபேட்டை பேரூர் திமுக கழக செயல்வீர்கள் கூட்டம் பாராளுமன்ற உறுப்பினர் கே.ஆர்.என் ராஜேஷ்குமார் தலைமையில் நடைப்பெற்றது.

நாமக்கல் மாவட்டம் நாமகிரிபேட்டை பேரூர் திமுக கழக செயல்வீர்கள் கூட்டம் பாராளுமன்ற உறுப்பினர் கே.ஆர்.என் ராஜேஷ்குமார் தலைமையில் நடைப்பெற்றது.இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் எம்.பி, வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் கலந்து கொண்டனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தியா கூட்டணியின் வேட்பாளர் மாதேஸ்வரன் அவர்களை ஆதரித்தும், பாராளுமன்ற தேர்தல் பணிகள் குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

இக்கூட்டமானது சட்டமன்ற உறுப்பினர் K. பொன்னுசாமி, ஒன்றிய கழக செயலாளர் KP.இராமசுவாமி, பேரூர் கழக செயலாளர் மற்றும் துணைத் தலைவர் அன்பழகன் முன்னிலையில் நடைபெற்றது. மேலும் பேரூர் மன்ற தலைவர், வார்டு கழக செயலாளர்கள், பேரூர் மன்ற உறுப்பினர்கள்,சார்பு அணி நிர்வாகிகள் உட்பட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story