ஊழல் செய்தவதற்காகவே திமுக கட்சி நடத்துகிறது - பாரிவேந்தர்
பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளராக இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார். இதனைத் தொடர்ந்து அவர் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் நடந்த பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ள நிலையில் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, தேனூர், கன்னப்பாடி, டி.களத்தூர் நக்க சேலம் உள்ளிட்ட பல கிராமப் பகுதியில் தனது பிரச்சாரத்தை மேற்கொண்டார்
அப்போது கடந்த ஐந்து ஆண்டுகளில் அவர் பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது செய்த நல திட்டங்கள், மற்றும் சொந்த செலவில் செய்த மக்கள் நலத்திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தவர், தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியைத் தவிர திமு கஊழல் செய்வதற்காகவே கட்சி நடத்துகின்றனர் ஊழல் செய்வதற்காகவே கட்சியில் இணைகின்றனர். என பேசினார். இந்நிகழ்ச்சியின் போது இந்திய ஜனநாயகக் கட்சி மற்றும் பாரதிய ஜனதா கட்சி, உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்,