நாடாளுமன்ற வேட்பாளருக்கு திமுக கட்சியினர் வரவேற்பு
தென்காசி திமுக நாடாளுமன்ற வேட்பாளரை உற்சாக வரவேற்பளித்த திமுக நிர்வாகிகள்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நாடாளுமன்ற வேட்பாளராக திமுக சார்பில் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் தமிழக முதல்வரால் வேட்பாளர் ஆக நியமிக்கப்பட்ட ராணி ஸ்ரீகுமார் இன்று சென்னையில் இருந்து விமான மூலம் புறப்பட்டு மதுரை வந்து மதுரையிலிருந்து சங்கரன்கோவில் வரும் வலிகளில் வழி நெடுகிலும் அவருக்கு திமுக கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அது தொடர்ந்து சங்கரன்கோவிலில் தேரடி திடல் முன்பு திமுக கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என 300க்கும் மேற்பட்டோர் திரண்டு நாடாளுமன்ற வேட்பாளரை மேல தாளங்களுடன் உற்சாகமாக சால்வை அணிவித்து வரவேற்றனர். இந்த நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா. தென்காசி வடக்கு மாவட்ட பொருளாளர் சரவணன். நகரச் செயலாளர் பிரகாஷ். நகர மன்ற தலைவர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர். .
Next Story