விழுப்புரத்தில் த.மு.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

விழுப்புரத்தில் த.மு.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் 

விழுப்புரத்தில் த.மு.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் பயங்கரவாத தாக்குதலை கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் விழுப்புரம் தெற்கு மாவட்டம் சார்பில் நேற்று மாலை விழுப் புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு நகர தலைவர் அஷ்ரப் அலி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜாமியாலம் ராவுத்தர் வரவேற்றார். மனிதநேய மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் அப்துல்சமது எம்.எல்.ஏ., த.மு.மு.க. மாநில செயலாளர் முஸ் தாக்தீன்,

மனிதநேய வர்த்தகர் சங்க மாநில பொருளாளர் அப்துல்ஹக்கீம், தமிழ்நாடு முஸ் லிம் மகளிர் பேரவை மாவட்ட துணைச்செயலா ளர் சையது பாத்திமா ஆகியோர் கலந்து கொண்டு பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் பயங்கரவாத தாக்குதலை கண் டித்து கண்டன கோஷம் எழுப்பினர். இதில் மாவட்ட தலைவர்கள் அஸ்கர்அலி, பசல் முகமது,

ஜான்பாஷா, மாவட்ட செயலாளர் பசில் தீன், மாவட்ட பொருளாளர் ரியாசுதீன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் சையது உஸ்மான், அலாவுதீன், அப்பாஸ், முகமது ஜக்கரியா உள் பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட துணைச்செயலாளர் அலிஅக்பர் நன்றி கூறினார்.

Tags

Next Story